Tata Motors
Niftybees
பங்குச் சந்தை முதலீடு: மனதில் கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்..!
பங்குச் சந்தையில் முதலீடு : மனதில் கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்..!
ஜி.எஸ்.ராஜேஷ் குமார், ஈக்விட்டி ரிசர்ச் அனலிஸ்ட்
பங்குச் சந்தையில் முதலீடு
செய்வது என்பது
பொழுது போகாமல்
விளையாடும் விளையாட்டு அல்ல. அது ஒரு கலையாகும். முதலீட்டுக்கேற்ற பங்குகளைத் தேர்வு
செய்யும்போது நாம்
மனதில் கொள்ள
வேண்டிய முக்கியமான 10 விஷயங்களை இனி பார்ப்போம்
1. பிரிவினை நல்லது..!
பொதுவாக, சிறு
முதலீட்டாளர்கள் தங்களுக்குப் பிடித்த ஓரிரு
பங்கு
களைத்
தேர்வு
செய்து,
அவற்றில் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படிச் செய்வது அதிக
ரிஸ்க்கானது. அதற்கு
பதில்
குறைந்தது ஐந்து
அல்லது
ஆறு
துறைகளைத் தேர்வு
செய்து,
அந்தத்
துறை
சார்ந்த 10 அல்லது
12 நிறுவனங்களில், தொடர்ந்து வருமானம் மற்றும் லாபம்
ஈட்டி
வருவதுடன், எதிர்காலத்திலும் லாபம்
ஈட்டக்கூடிய நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டுக்குத் தேர்வு
செய்வது நல்லது.
அதே
நேரத்தில், முதலீட்டுக் கலவையைப் (போர்ட்ஃபோலியோ) பரவலாக்குகிறேன் என்று
ஏகப்பட்ட பங்குகளில் முதலீடு செய்வதும் அதிக
ரிஸ்க்கானது. அதாவது,
அதிக
பங்குகள் என்கிறபோது அவற்றின் செயல்பாடுகளைச் சரியாகக் கவனிப்பது மிகவும் கடினம்.
ஒரு
பங்கு
முதலீட்டுக் கலவையில் 15 முதல்
20 பங்குகள் இருப்பது சரியாக
இருக்கும்.
2.
சார்ந்திருக்கும் துறையில் பங்கு வேண்டாம்..!
பொதுவாக, ஒருவர்
தகவல்
தொழில்நுட்பத் துறையில் வேலை
பார்க்கிறார் எனில்,
அவர்
ஐ.டி நிறுவனப் பங்குகளில் அதிகமாக முதலீடு செய்வதை நடைமுறையில் பார்க்கிறோம். இதேபோல், ஒருவர்
ரியல்
எஸ்டேட் துறையில் பணியில் இருக்கிறார் எனில்,
அவர்
ரியல்
எஸ்டேட் பங்குகளில் அதிகமாக முதலீடு செய்வதை வழக்கமாக வைத்திருப்பார். இப்படிச் செய்வதைத் தவிர்ப்பது அவசியம். காரணம்,
இந்தத்
துறையில் ஏதாவது
பாதிப்பு ஏற்பட்டால், இரட்டை
இழப்புக்கு வழி
வகுக்கும். உதாரணத்துக்கு, ஐ.டி துறையில் சிக்கல் எனில்,
அதில்
வேலை
பார்ப்பவருக்குப் பிரச்னை ஏற்படும். கூடவே,
அவர்
ஐ.டி பங்குகளில் முதலீடு செய்திருந்தால், அதன்
விலையும் கணிசமாக வீழ்ச்சி காணக்கூடும். அப்போது அவருக்கு இரட்டை
இழப்பு
ஏற்படும். இதைப்
பலரால்
தாங்கிக் கொள்ள
முடியாது.
ஜி.எஸ்.ராஜேஷ் குமார், ஈக்விட்டி ரிசர்ச் அனலிஸ்ட் |
3. தொடர்ச்சியான
முதலீடு அவசியம்..!
சிலர்
ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை என
எப்போதாவது பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். அப்படிச் செய்யாமல் மாதம்தோறும் ஒரு
குறிப்பிட்ட தொகையை
முதலீடு செய்து
வருவது
அவசியம். அப்படிச் செய்யும் பட்சத்தில்தான் நீண்டகாலத்தில்
பங்கு
முதலீட்டின் மூலம்
செல்வம் உருவாக்க முடியும்.
4.
தரமான பங்குகள் தேர்வு..!
தரமான
பங்குகளைத் தேர்வு
செய்வது மிக
முக்கியம். அப்போதுதான் உங்களின் மூலதனத்துக்குப் பங்கம்
வராமல்
இருக்கும். தரமான
நிறுவனப் பங்குகளைத் தேர்வு
செய்வதற்கு நிறுவனத்தின் பாரம்பர்யம், கடந்த
கால
வருமானம் மற்றும் நிகர
லாப
வளர்ச்சி, எதிர்கால வளர்ச்சி எதிர்பார்ப்பு ஆகிய
வற்றை
அலசி
ஆராய
வேண்டும்.
5.
முதலீட்டுக் கலவை சீராய்வு..!
பங்குச் சந்தையில் நீண்டகால முதலீடுதான் எப்போதும் லாபகரமாக இருக்கும். என்றாலும், அவ்வப்போது உங்களின் முதலீட்டுக் கலவையை
சீராய்வு செய்வது அவசியம். காரணம்,
எந்தவொரு நிறுவனப் பங்கும் தொடர்ந்து லாபம்
ஈட்டிக் கொண்டிருக்கும் எனச்
சொல்ல
முடியாது. நிறுவனத்தின் அடிப்படையில் ஏதாவது
பெரிய
மாற்றம் நடக்கும்போது அது
பங்கின் விலையில் எதிரொலிக்கும். அந்த
நிறுவனம் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு இல்லை
என்கிறபோது, பங்கு
விலை
லாபத்திலிருக்கும்போது அல்லது
இழப்புக் குறைவாக இருக்கும்போது வெளியேறி விடுவது புத்திசாலிதனமான செயலாக
இருக்கும்.
6.
மொத்த முதலீடு வேண்டாம்..!
எந்தவொரு நிறுவனப் பங்கிலும் மொத்தமாக முதலீடு செய்ய
வேண்டாம். அப்படிச் செய்யும்பட்சத்தில் பங்கின் விலை
ஏறுமுகத்தில் இருந்தால் மட்டுமே லாபம்
கிடைக்கும். ஒரு
நிறுவனப் பங்கில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கும் தொகையை
ஐந்து
பகுதியாகப் பிரித்து வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடைவெளியில் (குறிப்பாக, 15 நாள்கள் அல்லது
30
நாள்)
முதலீடு செய்வதைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், சராசரியாக குறைந்த விலையில் பங்குகளை வாங்கி
நீண்டகாலத்தில் நல்ல
லாபம்
பார்க்க முடியும்.
7. நேரம் காலம் பார்க்கத்
தேவையில்லை..!
பங்குச் சந்தை
முதலீட்டைப் பொறுத்தவரை, முதலீட்டுக்கு நேரம்
காலம்
பார்க்கத் தேவை
யில்லை.
எந்த
நேரமும் முதலீட்டுக்கு உகந்த
நேரம்தான். ஒரு
பங்கு
இந்த
விலைக்கு வந்தால்தான் வாங்குவேன் என்று
காத்திருப்பதும், அந்த
விலை
வந்ததும் இன்னும் இறக்கும் எனக்
காத்திருப்பதும் சந்தையில் பலரும்
செய்யும் தவறாகும். மேலும்,
ஒரு
பங்கின் விலை
எந்த
அளவுக்கு இறங்கும் என
யாராலும் சரியாகக் கணிக்க
முடியாது. எனவே,
முதலீட்டுத் தொகையைப் பிரித்து வைத்துக் கொண்டு
தொடர்ந்து முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.
8.
அடிப்படை மற்றும் தொழில்நுட்ப ஆய்வு..!
முதலீட்டுக்கு ஒரு
நிறுவனப் பங்கைத் தேர்வு
செய்ய
அடிப்படைப் பகுப்பாய்வை (ஃபண்டமென்டல் அனாலிசிஸ்) பயன்படுத்த வேண்டும். ஒரு
பங்கை
எந்த
விலையில் வாங்க
வேண்டும், எந்த
விலையில் விற்று
வெளியேற வேண்டும் என்பதற்கு தொழில்நுட்ப பகுப்பாய்வை (டெக்னிக்கல் அனாலிசிஸ்) பயன்படுத்த வேண்டும். இரண்டில் ஒன்றைத் தவிர்த் தாலும்
பங்கு
முதலீட்டில் லாபம்
பார்ப்பது கடினமாக இருக்கும்.
9.
லாபத்தை வெளியில் எடுத்தல்..!
பங்கு
முதலீட்டில் கண்ணில் கண்ட
லாபத்தை வெளியில் எடுக்கத் தயங்கக் கூடாது.
அப்படித் தவறவிட்டால் அது
காகித
லாபமாகவே போய்விடும். நாம்
ஏற்கெனவே குறிப்பிட்டது போல,
பங்கின் விலை
எதிர்பார்க்கும் குறிப்பிட்ட சதவிகிதத்தை எட்டிவிட்டால், ஒரு
பகுதி
பங்குகளை விற்று
லாபத்தை எடுத்துவிட வேண்டும். நாம்
விற்ற
பிறகு,
பங்கின் விலை
சுமார்
5 சதவிகிதத்துக்குக் கீழ்
இறங்கினால், விருப்பப்பட்டால், தேவைப்பட்டால் மீண்டும் குறைந்த விலையில் வாங்கி
முதலீட்டுக் கலவையில் சேர்த்துக்கொள்வதன் மூலம்
நீண்ட
காலத்தில் நல்ல
லாபம்
பார்க்க முடியும்.
10.
கையில் கொஞ்சம் காசு..!
எப்போதும் கையில்
கொஞ்சம் ரொக்கப் பணத்தை
வைத்திருப்பது அவசியம். காரணம்,
நீங்கள் வாங்கி
வைத்திருக்கும் பங்கின் விலை
எப்போது வேண்டுமானாலும் இறக்கம் காணலாம். பல
நேரங்களில் ஒட்டுமொத்த சந்தை
இறக்கத்தின்போது அடிப்படையில் வலுவான
பல
பங்குகளின் விலை
அதிக
இறக்கம் காண்பதை நாம்
கண்டிருக்கிறோம். கையில்
பணம்
இருந்தால், வாய்ப்பைத் தவறவிடாமல் முதலீடு செய்ய
முடியும்.
நாணயம் விகடன் மார்ச் 28, 2021 இதழில்
வெளியானது..!
https://www.vikatan.com/business/share-market/share-market-investment-guidelines-for-investors